பில்கேட்சும் பிடல் கஸ்ரோவும்

புதிதாக படமொன்று வெளியிட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் இருவர் பேசிக்கொள்கிறார்கள்.

முகம் 1: அண்ணே நம்ம சுந்தர சுகி படம் பிச்சிக்கிட்டு ஓடுதண்ணே. பசங்கெல்லாம் துள்ளுறாங்கண்ணெ. புமலோட படம்கூடப் படுத்திரிச்சிண்ணே.

முகம் 2: அட தம்பி இது போதாது. புதுசா ஏதாவது பண்ணி இன்னும் பப்ளிசிட்டி குடுக்கணும். புதுசா ஏதாவது அறிக்கை விடணும். ஆங்... ஒரு ஐடியா.

என்னண்ணே?

"பில் கேட்ஸ் என்ன செய்யப் போகிறார்?" அப்படின்னு ஒரு தலைப்பில போஸ்டர் ஒண்ணு அடிச்சு வுடு.

என்னத்த எழுதிறது?

“பில்கேட்ஸ் நம்ம தலையோட பூஜா படத்த தடை செஞ்சாரு. அதோட கேள்ஸ் படத்தையும் தட செஞ்சாரு. ஆனா பழய படத்துக்கு நோ தட. இப்ப நம்ம “சுந்தர சுகி” படத்துக்கு என்ன பண்ணப் போறாரு. நாம அவரோட விமர்ஜனத்த தான் பாத்துக்கிட்டிருக்கோம்.”அப்பிடின்னு போடு.

அண்ணே கோபிக்காதங்க, அவரு அப்பிடி பூஜா படத்த தட பண்ணினதா தெரியலீங்களே? அதோட அவருக்கிருக்கிற வேலைங்களுக்க இதையெல்லாம் பாத்து விமர்ஜனம் பண்ணுவாரான்னு தெரியல.

யார்றா அது? சுத்த வெளக்கெண்ணயா இருக்கே. யாரு அவரோட விமர்ஜனத்த எதிர்பாத்தா? நாம நம்ம பாட்டுக்குச் சொல்லுவோம். இந்த போஸ்டர் கூட அவருக்குப் போய்ச் சேருதோ தெரியல. ஆனா நாம நெனச்சது நடந்திரும். வெசயத்த கொஞ்சம் சீரியஸாக்குறதுக்கு இன்னும் கொஞ்சம் வெசயத்தச் சேத்துக்கோ.

என்னாண்ணே?

இப்படித்தான் முன்னாடியும் “செவுட்டில அறஞ்சா”ன்னு நம்ம முனி சாரு ஒரு படம் அதுவும் அவரப்பத்தியே எடுத்தாரு, ஆனா அவரு செவுட்டில அறஞ்சு ஒரு கண்டனம் குடுத்தாருன்னு போடு. இல்லேனா நம்ம படத்துக்கு மட்டுந்தான் எதிர்ப்பா இருக்காருன்னு நெனச்சு நம்ம எதிரிங்க எல்லாம் அந்தப் பக்கம் போயிடுவாங்க.

ஓ…அப்பிடீங்களா? ஆனா இப்பிடி சும்மா சும்மா அள்ளிவிடுறமே, இப்பிடி எதுவுமில்லைன்னு ஆயிட்டா ஜனங்க நம்மள முட்டாளாக்க மாட்டாங்க?

ஏய் யாருலே நீ? யாரு முட்டா? நாம குடுத்த படத்தில அவனவன் தலைகால் தெரியாமக் கெடக்கான். என்னத்தக் குடுத்தாலும் தலையில வச்சு ஆடல? காவடி எடுக்கல? அலகு குத்தல? மொட்ட போடல? நம்ம ஜனத்தப் பத்தி இன்னும் வெளங்காம இருக்கியே, ஒன்னயெல்லாம் வச்சி நானென்ன பண்ணப் போறனோ தெரியல.

கோச்சுக்காதண்ணே. நீங்க நெனச்ச மாரியே போஸ்டர சூப்பரா அடிச்சிடுறேன். வேறென்ன போடனும்?

இவ்ளோ போதும்.

சரிண்ணே. ஒரு சந்தேகம். ஸப்போஸ் அவரு தட செஞ்சிட்டாருண்ணா?

அட யாருலே நீ? அப்பிடியே பிளேட்ட திருப்பிப் போடு. அவரு தட செஞ்சாத்தான் இணையத்தில படங்காட்டுற களவாணிப் பசங்கெல்லாம் அடங்குவாங்கன்னு ஒரு வெசயத்தப் போடு. ஏன்னா அவருதானே இணையத்தின் தலைவன். அவரு தட செஞ்சா இணையத்தில தட செஞ்ச மாதிரி. அப்புறம் களவாப் படம் பாக்குறவங்கெல்லாம் நம்மகிட்டதானே வரணும்.

சரிண்ணே, அப்பிடியே போட்டுடலாம்.

ஆங். மறந்துட்டேன். பிடல்காஸ்றோவயும் இதில சேத்துக்கோ. இதே மாதிரி “பிடல்காஸ்றோ என்ன பண்ணப் போறாரு” அப்பிடின்னு இன்னொரு போஸ்டர் தயார் பண்ணு.

0 Responses to "பில்கேட்சும் பிடல் கஸ்ரோவும்"

Post a Comment